×

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராகும் AI?: 50% சுகாதாரத்துறை பணியாளர்கள் ஒப்புதல்..!!

சென்னை: மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதற்கு 50 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் அனைத்து துறைகளிலும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மருத்துவ துறையிலும் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆனால் விலைமதிப்பற்ற மனித உயிருக்கு சிகிச்சை அளிக்கவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அனுபவம் இருக்கும் 426 சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் குளோபல் டேட்டா என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில் நோயாளிகளின் நோய் அறிகுறிகளை கண்டறிந்து என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முடிவை எடுப்பதும் ஈடுபடுத்தலாம் என்று 50 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். சுகாதாரத்துறையில் தற்போது வரை நோயாளிகளின் தரவுகளை சேகரித்தல், மருத்துவத்துறை சார்ந்த ஆய்வு, நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் உள்ளிட்டவற்றில் மட்டுமே AI தொழில்நுப்டம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

The post நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராகும் AI?: 50% சுகாதாரத்துறை பணியாளர்கள் ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...